மத்திய அலை
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
வானொலி
[தொகு]வானொலி ஒலிபரப்புகள் பல்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுகின்றன.
அவையாவன
சிற்றலைகள்
[தொகு]சிற்றலைகள் 3 மெகா ஹெர்ட்ஸ் முதல் 22 மெகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும் அலைகள்
மத்திய அலைகள்
[தொகு]மத்திய அலைகள் 530 கிலோ ஏர்ட்சு முதல் 1600 கிலோ ஏர்ட்சு வரை இருக்கும். நெட்டலைகள் பொதுவாக 5 முதல் 540 கிலோ ஏர்ட்சு இருக்கும். ஏர்ட்சு (Hertz-Hz) என்பது வானொலி மற்றும் மின்னியல் அலைவரிசையினை மெட்ரிக்முறை யில் அளந்திடப் பயன்படும் அலகாகும். ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு[1].
மத்திய அலை ஒலிபரப்பு
[தொகு]மத்திய அலை (MW), வீச்சு மட்டு (Amplitude Modulation-AM) என்றும் அழைக்கப்படும். மத்திய அலைகள் 530 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1600 கிலோ ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.
மத்திய அலை ஒலிபரப்பில் தற்போது தமிழகத்தில் அகில இந்திய வானொலியின் சென்னை1, சென்னை2, சென்னை விவித பாரதி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி (திரைக்கடல் ஆடி வரும் தமிழ் நாதம்) மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்கள் ஒலிபரப்பை வழங்கி வருகின்றன[2]. தமிழில் மத்திய அலை ஒலிபரப்புகள் (MW Broadcast) தினந்தோறும் காலை 6.00 மணிமுதல் இரவு 11.00 மணிவரை ஒலிபரப்பப்படுகின்றன.
மத்திய அலை ஒலிபரப்புகள் பண்பலை ஒலிபரப்புகள் போல் குறைந்த பரப்பில் அல்லாது, ஒலிபரப்பப்படும் நிலைய சக்திக்கேற்ப பெரிய பரப்பில் கேட்க இயலும். ஒலிபரப்பு தெளிவாகவும் இருக்கும். சிற்றலை மற்றும் நெட்டலை ஒலிபரப்புகள் தெளிவில்லாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் மத்திய அலை ஒலிபரப்பை நமது வானொலிப்பெட்டியை ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வைக்க தெளிவான ஒலிபரப்பு கிடைக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கம்ப்யூட்டருக்குப் புதியவரா! ஹெர்ட்ஸ் குறிக்கும் செயல்பாடு, தினமலர். நாள்: ஜூலை 15, 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-02-11. பார்க்கப்பட்ட நாள் 2017-05-03.